நீதிபதியையே கதறவிட்ட தக்காளி விலை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது இதனை தொடர்ந்து நோய் பரவலை தடுப்பதற்காக கோயம்பேடு காய்கறி சந்தையில் மூடப்பட்டு இருக்கின்ற தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் எனவும், இதன் காரணமாக, வெளி மாநிலத்திலிருந்து தக்காளியை லாரிகளில் கொண்டு வந்து விலையை குறைக்கலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தக்காளி வியாபாரிகள் சார்பாக முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் தக்காளி விலை ஏற்றம் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் ஆகவே பொது நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளியில் லாரிகளை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று மார்க்கெட் கமிட்டிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உத்தரவிட்டார்.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவா உயர் நீதிமன்றம் ஒரு ஏக்கர் நிலம் வழங்க மார்க்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டது, ஆனால் வெறும் 50 சென்ட் நிலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து அந்த நிலத்தின் வரைபடத்தை தாக்கல் செய்தார்.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த சந்தை கமிட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேல்முருகன் 94 சென்ட் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது லாரிகளை நிறுத்தும் இடத்தில் தக்காளியை விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்.

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதி கடந்த 1ஆம் தேதி முதல் வெளிமாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் தக்காளியை கொண்டுவர சந்தையில் நிலம் ஒதுக்கியும், தக்காளி விலை குறையவில்லையே என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தென்மாவட்டங்களில் கனமழையின் காரணமாக, தக்காளி விளைச்சல் இல்லை மும்பை உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைவாக இருக்கிறது என கூறியிருக்கிறார்.

இதனை தொடர்ந்து நீதிபதி தக்காளி விலை குறைவு எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு குறைந்து இருக்கிறது. அதோடு கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் வர இருப்பதால் தக்காளி லாரிகளை நிறுத்த நிலம் ஒதுக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மேலும் நீட்டிக்கின்றேன் என உத்தரவிட்டுள்ளார்.