பரவி வரும் போது புதிய வகை நோய் தொற்று! மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அவசர கடிதம் எழுதிய சுகாதாரத்துறை செயலாளர்!

0
80

கொரோனாவின் உருமாற்றம் அடைந்த டெல்டா உள்ளிட்ட வைரஸ் பரவலாக இருக்கின்ற சூழ்நிலையில், புதிய உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தற்சமயம் 70 நாடுகளிலும், பல மாநிலங்களிலும் பரவுவதாக தகவல் கிடைத்திருக்கின்றன. நைஜீரியாவில் இருந்து வந்தவர்களுக்கு இந்த புதிய வகை நோய்த்தொற்று உறுதியாகி இருக்கிறது. ஆகவே பொது சுகாதாரத்துறை வழிகாட்டிகளை அமல்படுத்துவது மற்றும் கண்காணிப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது.

முக கவசம் அணிந்து கொள்வது, பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, உள்ளிட்டவை மிகக்குறைவான அளவில் காணப்படுகின்றது. வீடுகளிலும், வெளியிடங்களிலும், கூடும் கூட்டங்களிலும், அவை பின்பற்றப்படுவதில்லை. ஆகவே தொடர்புடைய துறைகள், என் .ஜீ. ஓ.க்கள் மூலமாக நோய்த் தொற்று தடுப்பு நடைமுறைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதுவரையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அதை செலுத்துவதையும் இரண்டாவது தவணைக்காக காத்திருப்பவர்களுக்கு செலுத்துவதையும் விரைவுபடுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன் உடன் கூடிய படுக்கை வசதி, தீவிர சிகிச்சைப் பிரிவுகள், வெண்டிலேட்டர்கள், மருந்துகள், மனிதவளம் உள்ளிட்ட சுகாதார வசதிகள் இருப்பது தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும்.

சென்ற மே மாதம் மற்றும் ஜூன் மாதங்களில் உச்சபட்ச படுக்கை வசதிகள் மாற்றப்பட்டன. அந்த எண்ணிக்கை பரிசீலனை செய்யவேண்டும், உருமாறிய பொது இடங்கள் மருத்துவமனைகளில் உருமாறிய நோய்த்தொற்று தொடர்பான விளக்கங்கள் அடங்கிய பதாகைகளை அதிகமாக வைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

நோய் தொற்று அல்லது உருமாறிய நோய் தொற்று என்று பீதியை ஏற்படுத்தாமல் உலக சுகாதார மையத்தின் அறிவுரைகளை அப்படியே முழுமையாக பின்பற்ற வேண்டும். சமூக வலைதளங்களில் பலர் உறுதிப்படுத்தப்படாத தகவல்களால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அதனை உங்களுடைய சரியான பதில் மற்றும் தகவல்கள் மூலமாக முறியடிக்க வேண்டும். சுகாதார மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள் மத்திய அரசு மற்றும் நிபுணர்களின் ஆலோசனை உள்ளிட்டவை வழங்கப்படவேண்டும்.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு ஆன கண்காணிப்பு சோதனை தொடர்பு, தடம் அறிதல், உள்ளிட்டவை அதிகரிக்கப்பட வேண்டும். அதிக நெருக்கடி இருக்கின்ற வசிப்பிடங்கள், பணியிடங்கள், தொழில் நடக்கும் பகுதிகள் தொடர்பான தகவல்களை சேகரித்து பரிசோதனைகளை தொய்வின்றி நடத்த வேண்டும். எப்போதும் போல நடத்தும் சோதனை போல அல்லாமல் கூடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பரிசோதனைக்கு உட்பட்டவர்களுக்கான சோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்த அறிவுரை வழங்க வேண்டும். இதன் மூலமாக மற்றவர்களுக்கு உடனடியாக இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்க இயலும் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நெறிமுறைகளை எந்தவிதமான தங்கு தடையும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு எழுதி இருக்கின்ற கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.