இந்திய சினிமாவில் பெரும் பங்கு என்றால் அது தமிழ், கேரளா, மலையாளம், தெலுங்கு சினிமா என்றே சொல்லலாம். கன்னட சினிமாவில் அவ்வளவாக படங்கள் வருவதில்லை. அப்படி வந்தாலும் பெரிது பேசப்படுவதில்லை என்பதே உண்மை.
அப்படி இருக்க கடந்த வருடம் மாபெரும் படைப்பை கன்னட சினிமா ஒன்றை கொடுத்தது. அதுதான் கே.ஜி.எப் பிரசாந்த மற்றும் யஷ் கூட்டணியில் உருவான படம். அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமாகும்.
ஹீரோ யஷ் மற்றும் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த படம் கே.ஜி.எப். இது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் ஆகும். இது தமிழ், ஹிந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. யாரும் எதிர் பாராத விதத்தில் வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்த படம் ஆகும். மேலும் இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது.
கே.ஜி.எப். முதல் படம் வெற்றி பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இந்தி சினிமாவின் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ் நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளார். நடிகர் சரண் சக்தி ஆகும். சரண் சக்தி தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு தம்பியாக நடித்திருந்தார். இது இல்லாமல் சகா என்ற தமிழ் படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
இந்த படத்தின் நடிப்பது பற்றி நடிகர் சரண் சக்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். பின்வருமாறு, கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பு வழங்கிய இயக்குனர் பிரஷாந்த் நீல்லிற்கு நன்றி என நடிகர் சரண் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கே.ஜி. எஃப் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போன்று வெற்றியடைய படகுழுவிர்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.