தமிழகத்தில் பல பகுதிகளில் வெயில் சதம் அடிக்கும்!! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி இன்று முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.
மேலும் மேற்கு திரை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோர பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து நகரில் சில பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் பதிவாகும். மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை சதம் அடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.