ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

0
224
#image_title

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 189 நபர்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று பாஜக வெளியிட்டது.

இதில் பல மூத்த தலைவர்களுக்கு இடம் அளிக்காமல் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மேலும் பல மூத்த தலைவர்களுக்கு பாஜக கட்சி மேலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை தேர்தல் அரசியலிலிருந்து விலக வற்புறுத்தி வருகின்றனர்.

இந்தக் கோரிக்கையை ஜெகதீஷ் ஷட்டர் ஏற்காமல் போர்க்கடி தூக்கிய நிலையில் கட்சி தலைமை முடிவை ஏற்று ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று ஈஸ்வரப்பா சொந்த தொகுதியான சிவமோகா நகரில் பாஜக கட்சியின் நகர மேயர் மற்றும் துணை மேயர் கவுன்சிலர்கள் என 19 பேர் கூண்டோடு பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இவர்களுடன் நகர் முழுவதும் வார்ட் வாரிய பூத் வாரிய உள்ள பாஜக கட்சி நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் நகரில் உள்ள முக்கிய தலைவர்கள் மேயர் சிவகுமார் மற்றும் துணை மேயர் சுனிதா தலைமையில் பெங்களூரு விரைந்து எடியூரப்பாவை நேரில் சந்தித்து ஈஸ்வரப்பா மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

எடியூரப்பாவிடம் மனு அளிக்க செல்கிறோம். நேற்று ஈஸ்வரப்பா அறிவிப்பு செய்த பிறகு தற்போது பூத் அளவில் உள்ள கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளனர்‌. அதனால் எங்களது கோரிக்கையை அவரிடம் நேரில் வலியுறுத்த செல்கிறோம்.

Previous articleவட இந்தியாவில் அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்!! 
Next articleநீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் நீதிபதி முன்பு நிற்க வேண்டிய நிலை ஏற்படும்_நீர்வளத்துறை அமைச்சர்!!