நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!!

0
271
#image_title

நெகிழி ஒழிப்பு பணியில் அழகிய கூடை செய்து வருமானம்!!

தஞ்சாவூர் மாநகராட்சியில் தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களில் இருந்து பயனுள்ள பொருட்களை உருவாக்கி, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதோடு மட்டுமல்லாமல் நெகிழியையும் மறுசுழற்சி செய்து தூய்மை பணியாளர்கள் அசத்தி வருகின்றனர்.

 

தஞ்சாவூர் மாவட்டம் நெகிழி மாசில்லா மாவட்டமாக மாறுவதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுபாட்டு வாரியம் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியை மாநகராட்சி அதிகாரிகள் கைப்பற்றி அதை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர், இதேபோல் வீடுகளிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது, இவ்வாறு சேகரிக்கப்பட்ட மக்கும் குப்பைகள் நுண்ணுயிர் உரமாக்கல் மையத்தில் உரமாக மாற்றப்படுகிறது, மேலும் மக்காத குப்பைகள் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, இந்நிலையில் தஞ்சாவூர் மாநகராட்சி நாலுகால் மண்டபம் பகுதியில் உள்ள மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்தில் (கோட்டம் 4) துப்புரவு பணியாளர்களுக்கு வருமானம் ஈட்டி தரும் பணியை செய்து வருகிறது, இந்த அலுவலகத்தில் 87 தூய்மை பணியாளர்கள் அப்பகுதி தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர், இந்தக் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சையின் முக்கிய வீதிகளான தெற்குவீதி, பழைய பேருந்து நிலையம்,கீழவீதி, மேலவீதி, அய்யங்கடை தெரு, காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்ளன, இந்த வணிக நிறுவனத்தில் சுமார் 10 கிலோ சேகரிக்கப்படும் குப்பைகளான “பேக்கிங் டேப் ” எனப்படும் டேப்பை சேகரித்து அதன் மூலம் அங்குள்ள பணியாளர் காளீஸ்வரி என்பவர் மூலம் அழகிய கூடை மற்றும் அலங்கார பொருட்கள் தயார் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர், மேலும் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களையும் விற்பனை செய்து, விற்பனை செய்யப்படும் தொகையினை அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது, மாதத்திற்கு சுமார் 50 கூடைக்கு மேல் உபயோகமற்ற பேக்கிங் டேப்பை கொண்டு அழகிய கூடை பொருட்கள் செய்யப்பட்டு வருகிறது அதிக வலுவாக இக்கூடை உள்ளதால் பொதுமக்கள் இவற்றை விரும்பி வாங்குகின்றனர், இதன் மூலம் நெகிழி இல்லா மாநகராட்சியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, நெகிழி இல்லா மாநகராட்சியாக மாற்றுவதன் மூலம் மாசுக்கட்டுப்பாடு ஏற்படுகிறது, மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வழிவகை செய்கிறது, இப்பணிகளை சுகாதார ஆய்வாளர் எபின்சுரேஷ் மேற்பார்வையாளர்கள் மணிவண்ணன், ஸ்ரீராம் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் செயல்படுத்தி வருகின்றனர்.

Previous articleசாலை விரிவாக்கத்தை தடுக்க முடியாது சாலை விரிவு படுத்தவில்லை என்றால் எப்படி கார் ஓடும் எ வ வேலு கேள்வி?
Next articleசமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு சுயமரியாதையுடைய வாழ்க்கையை வழங்குவதுதான் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் நோக்கம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை!!