தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற கோடியம்மன் ஆலய பச்சைக்காளி பவளக்காளி திருவிழா!! கோலாகல கொண்டாட்டம்!!
விஜயாலய சோழனால் கட்டப்பட்டு சோழர் நாயக்கர் மராட்டியர் போன்ற மன்னர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டதும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களில் பழமை வாய்ந்ததுமான அருள்மிகு கோடியம்மன் ஆலயம் ,தஞ்சாவூரில் எல்லைப் பகுதியில் உள்ளது.
இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. மகாவிஷ்ணு அம்சமான பச்சை காளியும் சிவபெருமானின் அம்சமான பவளக்காளியும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி காளியாட்டம் ஆடும் நிகழ்ச்சி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தஞ்சாவூரில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதைப்போல் இந்தாண்டு பச்சைக்காளி பவளக்காளி திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது, இரண்டு காளி அம்மன்களையும் அழைத்து வந்து இரண்டு காளியம்மன் களும் வழங்கிய திருநீர் நிரப்பிய தனித்தனி கபாலங்களை பெற்று பக்தர்களுக்கு தலையில் திருநீறு பூசிவிட்டு இரண்டு காளியம்மன் களையும் ஆசி வழங்க செய்வார்கள்.
அதன்படி இன்று பச்சைக்காளி அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் இருந்தும் பவளக்காளி அருள்மிகு கொங்கனேஸ்வரர் திருக்கோயில் இருந்தும் புறப்பட்டு நகர்வலம் வந்து வீடு வீடாக சென்று ஆசி வழங்கியது. இதனை ஏராளமானோர் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.