மக்கள் பரிதாபம் 24மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா ரஷ்யாவில்

0
209

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,096 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,159 மக்கள் பலியாகி உள்ளனர்.ரஷ்யாவில் சென்ற சில வாரங்களாக கொரோனா பாதிப்பால் மக்களின் உயிர் தொடர்ந்து அதிகரித்து வருகிற

ரஷ்யாவில் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் முதலாகத் தடுப்பூசியை அறிமுகம் செய்த நாடு ரஷ்யா.

ஆனால், ரஷ்யாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வெளிநாடுகளில் மட்டுமல்லாமல் உள்நாட்டிலும் கட்டுப்பாடு அமல் படுத்தப்படுகிறது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் முதல் தவணையைப் போட்டுக்கொண்ட சிலர், இரண்டாவது தவணை தடுப்பூசி போட முடியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்த போதிலும் ரஷ்யாவில் கொரோனா பரவல் தொடர்ந்து உயர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இதனால் ரஷ்யா தலைநகராகிய மாஸ்கோவில் முதல்கட்டமாக அடுத்த 11 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேவையான சேவைகள் தவிர மற்ற அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அவசியமின்றி வெளியே நடமாடவும், பயணம் செய்யவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேவையான மருத்துவ சேவைகளும், உணவு வகைகளும், எந்த தடையின்றியும் கிடைக்குமளவுக்கு சேவைகள் ஏற்பாடு செய்துள்ளது.

Previous articleவீட்டின் சுவர்களை பெயர்த்து சாப்பிடும் வினோத பழக்கம்! ஒரு வாரத்தில் மட்டும் 3.2 சதுர அடி சாப்பிடும் அவலம்!
Next articleகார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ! பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!