இந்திய வரலாற்றிலேயே 45 கோடி ரூபாய் செலவு செய்து 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே வசூல் செய்த படம்!!

Photo of author

By Gayathri

தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் கடந்த ஆண்டு, அஜய் பஹ்லின் இயக்கத்தில், காதலும் த்ரில்லரும் கலந்த ‘தி லேடி கில்லர்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டி சீரிஸ் தயாரிப்பு நிறுவனம் 45 கோடி ரூபாய்க்கு தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வரலாற்றிலேயே மிக மோசமான படமாக இப்படம் குறிப்பிடப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தினை தயாரிக்க படக்குழு 45 கோடி ரூபாய் செலவு செய்த நிலையில் இந்த படத்தின் வசூல் 60 ஆயிரம் ரூபாயாகவே இருந்திருக்கிறது. இது படக்குழுவிற்கு மிகப்பெரிய அடியாகவே இருந்தது என்றும் கூறலாம்.

திரையரங்குகளில் ஓடாத இப்படத்தை எந்த ஓடிடி தளங்களும் வாங்க மறுத்துவிட்டன. ஏனெனில் திரையரங்கில் ஓடாத இப்படத்தினை ஓடிடி யில் ரிலீஸ் செய்தால் எந்த வித லாபமும் இருக்காது. மேலும், வேறு வழி இன்றி டி சீரீஸ் நிறுவனம் இந்த படத்தினை தனது youtube பக்கத்தில் இலவசமாக அனைவரும் பார்க்கும் விதம் போஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தினை குறித்து தயாரிப்பாளர் பேசும்பொழுது இதில் காதல் காட்சியினை முழுமையாக நாங்கள் காட்டவில்லை என்றும், அர்ஜுன் மதுவிற்கு அடிமையாவது ஊரை விட்டு வெளியேறுவது போன்ற உளவியல் கருத்துக்களையும் திறம்பட கையாளவில்லை என்றும் இதனால் தான் இந்த படம் மக்களிடையே பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளனர்.