கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி- மத்திய அரசு!!
இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 5,676 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.
ஒட்டுமொத்த கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 37,093 ஆக உயர்வு.கடந்த 24 மணி நேரத்தில் , 3,761 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.21 பேர் உயிரிழப்பு.
வாராந்திர பாதிப்பு சதவீதம் 3.81 என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் , கேரளா , டெல்லி ஹிமாச்சல் பிரதேஷ் , தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முதல் ஐந்து இடத்தில் உள்ளது.