பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

Photo of author

By Savitha

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

Savitha

பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம்! கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை

புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் நள்ளிரவு கூலி தொழிலாளி தலையில் கல்லை போட்டு கொலை செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி, உருளையன்பேட்டை ,பகுதியில் உள்ள நவினா கார்டன் அருகே நள்ளிரவு 35 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் இரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக உருளையன்பேட்டை போலீசார்க்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்ததில் சடலமாக இருந்தது.

உருளையன்பேட்டை ராஜா நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (35). கூலித்தொழிலாளி என்பதும் அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் (45) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் கண்ணன் தான் ரஞ்சித்தை கொலை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.