பங்கு சந்தையில் இன்று!! முதலீடு செய்யலாமா? வணிகம் செய்ய நல்ல வாய்ப்பு தான்!!
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்றும், இந்திய சந்தைகள் பெரிதும் மாற்றம் ஏதுமின்றி சற்று சரிவில் உள்ளது. சென்ற சில அமர்வுகளாகவே ஏற்ற இறக்கத்தினை கண்டு வரும் இந்திய சந்தைகள், இன்றும் பல்வேறு சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் சிறிது சரிவில் தான் உள்ளது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக சரிந்த பொருளாதார நிலைமையே,இன்னும் மீளவில்லை. இது மாற மேலும் சில காலம் ஆகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் மூன்றாம் அலை குறித்த அச்சம் இந்தியாவில் பெரிதும் பரவி வருகிறது.இது எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்த போகிறது என்று தெரியவில்லை. இந்த கால கட்டத்தில் பல லட்சம் மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ள நிலையில், இப்போது தான் சற்றே மீண்டு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் இன்னொரு ஊரடங்கு என்பதை இந்தியா எதிர்கொள்ளுமா? அப்படி நிகழ்ந்தால் அன்னிய முதலீடுகள் மற்றும் உள்நாட்டு முதலீடுகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நிலவரப்படி ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சற்று தடுமாற்றத்தில் தான் தொடங்கியது. இதைதொட்ந்து ஆரம்பத்திலும் சற்று சரிவில் தான் தொடங்கியது. சென்செக்ஸ் 10.76 புள்ளிகள் குறைந்து, 52,758.97 புள்ளிகளாகவும்,மேலும் நிஃப்டி 2.50 புள்ளிகள் குறைந்து, 15,809.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸ் 104.97 புள்ளிகள் குறைந்து, 52,664.76 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 34.35 புள்ளிகள் குறைந்து, 15,778.80 புள்ளிகளாகவும் காணப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பானது சற்று குறைந்து, 74.58 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 74.49 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
இந்நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே உள்ளன. சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஹெச்.டி.எஃப்.சி, மாருதி சுசூகி, ஹெச்.யு.எல், நெஸ்டில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், மேலும் டெக் மகேந்திரா, லார்சன், ஹெச்.சி.எல் டெக், என்.டி.பி.சி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும் உள்ளன. நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ஹெச்.டி.எஃப்.சி, மாருதி சுசூகி, நெஸ்டில் ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும், மேலும் டெக் மகேந்திரா, லார்சன், ஹெச்.சி.எல் டெக், ஓ.என்.சி.ஜி, என்.டி.பி.சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும்உள்ளன.