இந்த இடைத்ததேர்தலில் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடங்கும்!! தேர்தல் ஆணையத்தின் ரிசல்ட்டை இன்றே கணித்த டிடிவி!!
ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெற போவதையொட்டி ஆளும் கட்சி மற்றும் இதர கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அதிமுக மட்டும் வேட்பாளரை கூட அறிவிக்க முடியாமல் பின் தங்கி வருகிறது.இதனை அனைத்து கட்சிகளும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வரும் வேலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அவர் நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டு அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது, ஆளும் கட்சியானது அவர்களின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னத்தை வைக்கலாம் என கூறி பட்ஜெட் ஒதுக்கியுள்ள நிலையில், அதனை அவர்களுடைய கட்சி சார்பில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் அதனை விட்டு தற்பொழுது பல திட்டங்களுக்கு நிதி நெருக்கடி இருக்கும் பட்சத்தில் இதனை முன்வைத்து நினைவுச்சின்னத்தை வைப்பது மிகவும் தவறு.
அவ்வாறு நினைவுச் சின்னத்தை வைப்பதாக இருந்தால் அவர்களுடைய அறிவாலயத்தில் கூட வைத்துக் கொள்ளலாம் அதற்கு மாறாக சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கடலில் வைக்காமல் வேறு இடத்தில் வைக்கலாம் என தெரிவித்தார்.அதிமுக இரட்டை இலை சின்னம் இல்லாமல் தடுமாறி வருகிறது. இதற்கான பதிலை தேர்தல் ஆணையம் தான் சொல்ல வேண்டும். அதேபோல நாளடைவில் ஓ பன்னீர்செல்வம் அவருடைய வேட்பாளரை அறிமுகம் செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2017 ஆம் ஆண்டு இதுபோல ஒரு தேர்தலில் நான் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இரட்டை இலை சின்னம் வேண்டும் என மனு கொடுத்து இருந்த பொழுது அதனை தேர்தல் ஆணையம் ரத்து செய்து, இரட்டை இலை சின்னத்தை முடக்கியது. அதேபோல தான் இந்த தேர்தலிலும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கையெழுத்து போட்டால் மட்டுமே இரட்டை இலை சின்னம் கிடைக்கும் இல்லையென்றால் அது முடக்கும் நிலைக்கு தான் வரும்.
இவ்வாறு அதிமுகவில் இரு அணிகளாகப் பிரிந்து எதிரும் புதிரமாக இருப்பது பலருக்கும் சாதகமாக அமைகிறது. அது மட்டுமின்றி பலருடைய சுயநலத்தால் அதிமுக மிகவும் வலுவற்று காணப்படுகிறது. இவ்வாறு இருப்பதால்தான் நான் அதிமுகவை விட்டு வெளியே வந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் போட்டியிட்டு வருகிறேன்.
கடந்த தேர்தலில் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை தற்பொழுது வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் முழுமையாக நான் மற்றும் தனது நிர்வாகிகளும் ஈடுபட்டுள்ளனர். அதேபோல திமுக என்ற தீய சக்தியை அழிக்க அம்மாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.