வெட்டிவேர் மூலம் தயாரிக்கப்பட்ட முகக்கவசம்! உதகை பிசியோதெரபிஸ்டின் புதிய முயற்சி!

Photo of author

By Parthipan K

வெட்டிவேர் மூலம் தயாரிக்கப்பட்ட முகக்கவசம்! உதகை பிசியோதெரபிஸ்டின் புதிய முயற்சி!

Parthipan K

Updated on:

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது.இந்நிலையில் உதகையில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் வெட்டிவேர் மூலம் முகக்கவசத்தை தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் கொரோனாவிலிருந்து நம்பை பாதுகாத்து கொள்ள முகக்கவசம் மற்றும் சானிடைசரை பயன்படுத்துகிறோம்.இந்நிலையில் ஒரு புதிய முயற்சியாக பிசியோதெரபிஸ்ட் ஐஸ்வர்யா என்பவர் முகக்கவசத்தை வெட்டிவேர் மூலம் தயாரித்து அதனை விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து பிசியோதெரபிஸ்ட் ஐஸ்வர்யா கூறியதாவது,வெட்டிவேர் பொதுவாகவே கார்பன்-டை-ஆக்சைடை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.இதனால் ரூ.1000 க்கு வெட்டிவேர் வாங்கி அதன் மூலம் முகக்கவசங்களை தயாரித்து வருகிறேன்.வெட்டிவேர் ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்.மேலும் இந்த முகக்கவசத்தை 5 நாட்கள் சுத்திகரித்து பயன்படுத்தலாம்.இந்த முகக்கவசத்தை வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டினருக்கு ஆர்டர் மூலம் விற்பனை செய்து வருகிறேன்.

இதனை தயாரிக்க 20 ரூபாய் முதல் 23 ரூபாய் செலவு ஆவதால் இந்த வெட்டிவேர்
முகக்கவசத்தை சில்லறையாக வாங்குவோருக்கு 30 ரூபாய்க்கும், மொத்தமாக வாங்குவோருக்கு 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.