மேற்கு வங்காளத்தில் ஆண்கள் பெண்களாக வேடமணிந்து 232 ஆண்டுகளாக பூஜை செய்து வருகிறார்கள்.
ஆண்கள் பெண்களாக வேடமணிந்து பூஜை செய்யும் வினோத சம்பவம் மேற்கு வங்காளத்தில் நடைபெறுகிறது. அதாவது மேற்கு வங்காளத்தில் கார்த்திகை மாதம் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. இதில் துர்கா பூஜை, லட்சுமி, காளி பூஜை பிறகு தான் இந்த பூஜை நடத்தப்படுகிறது. இது மேற்கு வங்காள மாநிலத்தில் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆகும். இதில் தான் ஆண்கள் பெண்களாக வேடம் அணிந்து வினோத பூஜை செய்து வருகிறார்கள்.
ஜகதாத்ரி என்ற பெயரில் இந்த பூஜை நடைபெற்று வருகிறது. இந்த பெண் வேடம் அணியும் பூஜை சுமார் 232 ஆண்டுகள் நடந்து வருகிறது. பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு காலனி ஆதிக்கம் இருந்த போது பத்ரேஸ்வர் கௌஹாத்தி பகுதியை கைப்பற்றி இருந்தார்கள். ஆனால் பெண்கள் அப்பகுதியில் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். அந்த காலகட்டத்தில் நடந்த இந்த விழாவிற்காக ஆண்கள் ஜகதாத்ரி அம்மனுக்கு பூஜை செய்ய முற்பட்டார்கள்.
அப்போது தங்கள் வீட்டு பெண்கள் போல புடவை கட்டி, பொட்டு வைத்து மஞ்சள் பூசி,பூ வைத்து தெய்வத்திற்கு பூஜை நடத்தி வருகிறார்கள். இதனை பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறார்கள். இந்த கோவிலுக்கு போது மக்களை அனுமதிப்பதில்லை.