துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

Photo of author

By Divya

துளசி செடியை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும்? எத்தனை செடிகளை வளர்க்கலாம்?

Divya

இந்து மாதத்தில் துளசி செடி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.துளசி ஒரு மூலிகை செடி மட்டுமின்றி மகாலட்சுமியின் மரு உருவமாக இது பார்க்கப்படுகிறது.இந்த துளசி செடியை இந்துக்கள் தங்கள் வீட்டில் வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இந்த துளசி செடியை வீட்டில் வளர்ப்பவர்கள் அவை தரையில் படராமல் வளர்க்க வேண்டியது முக்கியம்.

துளசி செடி புனிதமான செடி என்பதால் அதை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும்.வீட்டில் உள்ள துளசி செடிகளை ஏகாதசி நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை நாளில் தொடுவதை தவிர்க்க வேண்டும்.துளசி செடியை வியாழக் கிழமை நாட்டல் நல்ல பலன்கள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

துளசி செடிக்கு அருகில் மண் விளக்கில் தீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபட்டால் கோடி புண்ணியம் வந்து சேரும்.துளசி செடியை நடவு செய்வதற்கு முன் அதை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது பற்றி அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

துளசி செடியை வடகிழக்கு திசையை நோக்கியவாறு வைத்தல் சிறப்பு.சிலர் வீடுகளில் அதிகமான துளசி செடிகளை வைத்திருப்பார்கள்.ஆனால் உண்மையில் துளசி செடி வைப்பதில் எண்ணிக்கை அவசியமான ஒன்று.அதன்படி துளசி செடி வைக்கும் போது ஒன்று,மூன்று,ஐந்து என்ற ஒற்றை எண்ணிக்கையில் வளர்க்க வேண்டும்.

துளசி செடி வளர்ப்பவர்கள் அதற்கு அருகில் குப்பை,காலணிகள் போன்றவற்றை வைப்பதை தவிர்க்க வேண்டும்.காலையில் எழுந்ததும் குளித்துவிட்டு துளசி செடிக்கு தண்ணீர் ஊற்றிவிட்டு அதன் அருகில் மண் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும்.அதேபோல் துளசி செடியை மண்ணில் வளர்ப்பதைவிட கொள்கலனில் வளர்ப்பது இன்னும் நல்லது.