தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில் இன்றும், நாளையும் கடலோர மாவட்டங்கள், மற்றும் அதைச் சுற்றியுள்ள உள் மாவட்டங்களிலும், தென் மாவட்டங்கள், காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இதன் காரணமாக நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.