திருவெறும்பூரில் கலைஞர் சிலை திறப்பு!. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!!…

Photo of author

By Jeevitha

கலைஞர் கருணாநிதியின் சிலை இன்று திருச்சியில் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ,மு. க. ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

இன்று ஆகஸ்டு 7 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்நிலையில் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ சிலை திருவெறும்பூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியில் இன்று தமிழக முதல்வர் மு. க . ஸ்டாலின் அவர்களால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாளான இன்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் கலைஞர் அவர்களின் நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக இன்று சென்னையில் அமைதி பேரணி அண்ணாசாலையில் இருந்து கடற்கரை நினைவிடம் வரை நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என பெரும்பான்மையானவர்கள் கலந்துகொண்டனர்.