இரண்டு ஆண்டுகள், ஒரு ஆண்டு,6 மாதங்கள் என்று ஊக்கத் தொகையுடன் 100 சதவீதம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியில் சேர்ந்து படிக்க விண்ணபிக்குமாறு தற்பொழுது முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 10வது, 12வது படித்தவர்கள், டிப்ளமோ வகுப்பு படித்தவர்கள், கலை அறிவியல் படிப்பு படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் என அனைவரும் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு சான்றிதழ்களுடன் நேரில் வந்து இந்த தொழிற்பயிற்சியில் சேரலாம்.
தொழிற்பயிற்சியில் சேரும் இவர்களுக்கு மாதம் மாதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். பயிற்சி முடிந்த பின்னர் நேர்காணல் நடத்தப்படும். அவர்களுக்கான வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். அடுத்து என்னென்ன தொழிற்பயிற்சி வழங்கப்படுகின்றது அதற்கான தகுதிகள் என்னென்ன பேசப்போகிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கான தொழிற்பயிற்சி…
இரண்டு ஆண்டுகளுக்கான தொழிற்பயிற்சியில் சிவில் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட், டிராப்ட்ஸ்மேன், சிவில் டிராப்ட்ஸ்மேன், மெக்கானிக்கல், டர்னர், மெஷினிஸ்ட், லிப்ட் மெக்கானிக், பிட்டர், ஏசி மெக்கானிக் போன்ற வேலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணபிக்க 10வது அல்லது 12வது அல்லது டிப்ளமோ அல்லது கலை அறிவியல் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
ஓராண்டுக்கான தொழிற்பயிற்சி…
ஓராண்டுக்கான தொழிற்பயிற்சியில் இன்டீரியர் டிசைன் அன்ட் டெக்கரேஷன் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க 10வது அல்லது 12வது வகுப்பு படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது கலை அறிவியல் படிப்பில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
அதே போல டிரோன் பைலட் வேலைக்கு ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இதற்கும் 10வது அல்லது 12வது வகுப்பு படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.
தொழில்நுட்ப மையம் 4.0 ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளில் கூடிய பயிற்சி…
தமிழ்நாடு அரசானது டாட்டா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப மையம் 4.0 திட்டம் மூலமாக ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கான பயிற்சிக்கு சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் தொழில்நுட்ப மையம் 4.0 திட்டத்தின் கீழ் ஓராண்டு பயிற்சியில் இண்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்ச்சரிங் டெக்னீசியன் வேலைகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கும் 10வது அல்லது 12வது வகுப்பு படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.
அதே போல இரண்டு ஆண்டுகளுக்கான பயிற்சியில் மெக்கானிக் எலக்டிரிகல் வேய்க்கல், பேசிக் டிசைனர், விரிச்சுவல் வெரிப்பையர், மெக்கானிக்கல் அட்வான்சுடு சிஎன்சி மெஷினிங் டெக்னீசியன் ஆகிய வேலைகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதற்கும் 10வது அல்லது 12வது வகுப்பு படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட தொழில் பயிற்சிகளில் சேர்ந்து படிப்பவர்களுக்கு மாதம் 750 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். மேலும் விலையில்லா இலவச NIMI பாடபுத்தகங்கள், இரண்டு செட் சீருடை, ஒரு ஷூ, பஸ்பாஸ் முதலியவை தமிழக அரசால் வழங்கப்படும். பயிற்சியில் பயிலும் மாணவர்களுக்கு தங்கி படிக்க விடுதி வசதியும் இருக்கின்றது.
இதில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாயும் பெண்களுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதம் 1000 ரூபாயும் உதவித் தொகை வழங்கப்படும். இந்த பயிற்சியில் சேர விண்ணப்பக் கட்டணம் இல்லை. இந்த பயிற்சி முடிந்த பின்னர் நேர்காணல் நடத்தப்பட்டு தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.