2023-2024 அரவை பருவத்திற்கு ஆலைகளுக்கு பதிவு செய்த விவசாயிகளுக்கு இந்த சிறப்பான ஊக்கத்தொகையை வழங்க ஆணை வெளியிட்டுள்ளது. எப்போதும் கரும்பு விவசாயிகள் மீது தனி அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு கரும்பு உற்பத்தியை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்க நலிவடைந்த கரும்பு விவசாயிகளை ஊக்கபடுத்த ஒவ்வொரு ஆண்டும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு மேற்கொள்ளும் அரசு நடவடிக்கை மூலம் கரும்பு சாகுபடி அதிகரிப்பது மட்டுமல்லாமல் கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு அதிகரிக்கிறது, மேலும் சர்க்கரை ஆலைகளின் செல்திரனும் அதிகரித்து வருகிறது.
முதல்வர் ஆணையின்படி வேளாண்மை துறை அமைச்சர் 2023-2024 அரவை பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 கோடி வழங்கப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆணையின் படி தமிழகத்தில் இயங்கி வரும் 2 பொதுத்துறை, 12 கூட்டுறவுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு ஒன்றிய அரசு அறிவிக்கப்பட்ட நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ. 215 யும் டன் ஒன்றுக்கு ரூ.3134.75/- விவசாயிகள் பெறுவார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247.௦௦ கோடி மதிப்பில் மாநில அரசு வழங்கும் மேலும் இதன் மூலம் 1.20 விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.