பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்

Photo of author

By Anand

பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்

Anand

Incident at BJP office! Shocked executives

பாஜக கட்சி அலுவலகத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் நிர்வாகிகள்

கொரோனா பாதிப்பிலிருந்து ஓரளவு மீண்ட நிலையில் தற்போது அதன் உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியும்,இரவு நேர ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன.மேலும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் அதி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று ஒரு நாளில் மட்டுமே 1.94 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனைதொடர்ந்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று உறுதியான ஊழியர்கள் அனைவரும் தனிமைபடுத்தபட்டுள்ளனர்.

மேலும் கட்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகம் சார்ந்த முக்கிய பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை மட்டும் தலைமையகம் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.