அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு! 

Photo of author

By CineDesk

அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு! 

CineDesk

Including... the woman who threw 43 Savaran jewels in the trash! Distribution at the ATM center!

அடங்கப்பா… 43 சவரன் நகையை குப்பையில் வீசிய பெண்! ஏடிஎம் மையத்தில் பரப்பரப்பு! 

சென்னையை அடுத்த குன்றத்தூர் முருகன் கோவில் செல்லும் சாலையில் தனியார்க்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வரும் கோதண்டம் என்பவர். இவர் வழக்கம்போல் கோதண்டம் நேற்று காலை ஏடிஎம் மையத்திற்கு சென்றார். ஏடிஎம் மையத்துக்குள் சென்றபோது குப்பை தொட்டியில் கைபை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பையில் என்ன இருக்குமோ என்று அவருக்கு தெரியவில்லை கோதண்டம் பயத்துடன் இருந்தார். அந்தப் பையை எடுத்து பிரித்துப் பார்க்கும்போது அதில் நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைத்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையில் வந்த போலீசார் நகை பையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்தனர். ஆய்வு செய்து போது 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்றதாக தெரியவந்துள்ளது. பின்னர் கதவை திறந்து குப்பைத் தொட்டியில் நகையை போட்டுவிட்டு சென்றதாக காட்சி பதிவாகி இருந்தது.

இந்தப் பெண் யார் என போலீசார் விசாரித்த போது குன்றத்துரை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. போலீசார் விசாரணையில் 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவருடைய பெற்றோர் போலீசாருக்கு தெரிவித்த நிலையில் பின்னர் அவர் வீட்டிற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சிசிடிவி காட்சியை அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்த போது அந்த காட்சியில் இருந்து தனது மகள் தான் என்று கூறினர். இந்தப் பெண் 43 பவுன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றதாக அவரது பெற்றோரிடம் கூறிய போது அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தப் பெண் சற்று மன அழுத்தத்தில் இருப்பதாகவும், தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகை பையை எடுத்து வந்து குப்பைத் தொட்டியில் போட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதை அடுத்து குன்றத்தூர் போலீசார் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் நகைப்பை ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து உரிய நேரத்தில் நகை பையை கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை போலீசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.