வருமான வரித்துறையினர் திடீரென்று மேற்கொண்ட அதிரடி சோதனையால் ரூபாய் எட்டு லட்சம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது பீகார் மாநிலத்திலுள்ள, பாட்னாவில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து பணம் பறிமுதல்.
பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடந்து வரும் நிலையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், இந்த ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த பணம் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணம் எங்கிருந்து எதற்காக இங்கே வந்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியினரிடம் கேட்டபோது, இந்த பணத்திற்கும் எங்கள் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளனராம்.