சபரீசனை தொடர்ந்து திமுகவின் வியூகத்திலும் கை வைத்த வருமானவரித்துறை!

Photo of author

By Sakthi

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட திலிருந்து தமிழகம் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது அதுவரையில் ஆளும் கட்சியான அதிமுக வசமிருந்த அரசாங்கம் தேர்தல் தேதி அறிவிப்பிற்குப் பின்னர் அதிகாரிகள் வசம் சென்று விட்டது.இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பறக்கும் படை மற்றும் வருமான வரித்துறையினர் போன்றவர்களை வைத்து தமிழகம் முழுவதிலும் பல அதிரடி சோதனைகளை மேற்கொண்டது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையம் மேற்கொண்ட இந்த அதிரடி சோதனைகளுக்கு ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகளும் தப்பவில்லை. இப்படி தமிழகம் முழுவதும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பல கோடி ரூபாய் பணம் நகை போன்றவற்றை கைப்பற்றியது தேர்தல் ஆணையம்.திமுகவின் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் சபரீசன் கார்த்திக் மோகன் ஜூஸ் பாலா போன்றோரின் இல்லங்களிலும் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து கரூர் சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அவர்களின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 15ற்கும் அதிகமான பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி அவர்களின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வருகிறார்கள் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் இருக்கின்ற திமுகவின் வேட்பாளர் செந்தில் பாலாஜி அவர்களின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதோடு கிருஷ்ணாபுரத்தில் இருக்கக்கூடிய செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் அவர்களின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைகளை செய்து வருகிறார்கள்.அதோடு திமுகவிற்கு தேர்தல் வியூக வகுப்பாளர் ஆக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் அவர்களின் அலுவலகத்திலும் வருமான வரித் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டிருக்கிறார்கள் அங்கே சில முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.