மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு”- வதந்தி இல்லை உண்மை இதுதான்!! மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்!!

Photo of author

By Rupa

மத்திய அரசு சார்பில் மக்களுக்குப் பல சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல திட்டங்களைச் செயல்படுத்தி, மக்களுக்குப் பயன்பெறும் வகையில் இருக்கின்றது. அந்த வகையில், சமீபமாக வருமான வரி செலுத்துவதில் மூத்த குடிமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று ஒரு செய்தி பரவி வருகின்றது. அதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்ப்போம்.

கடந்த சில நாட்களாக மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு என்கின்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியில், “இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி செலுத்துவதில் விலக்கு அளித்து மோடி அரசு உத்தரவிட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை மகாராஷ்டிரா மூத்த குடிமக்கள் கூட்டமைப்பின் செயலர் “சுரேஷ் போட்டே” வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில், இதன் உண்மைத் தன்மையை அறிந்த மத்திய அரசின் உண்மையைக் கண்டறியும் குழு, இது போலியான தகவல் என்று வெளியிட்டுள்ளது. அதாவது, “75 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானத்திலிருந்து மட்டுமே வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் வருமானத்தைக் கணக்கிட்டப் பிறகுதான் அவர்களுக்குக் குறிப்பிட்ட வங்கியால் தகுதியான வரி விலக்குகள் அளிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.