மேலவையில் பாஜகவுக்கு பலம் அதிகரிப்பு – எப்படி தெரியுமா?

Photo of author

By Parthipan K

மேலவையில் பதினோரு உறுப்பினர்களின் பதவி காலம் ஆனது இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இந்த பதினோரு நபர்களும் உத்திரபிரதேச மாநிலம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். 

தற்போது இவர்களின் பதவிக்காலம் முடிவுற்றதால், மீண்டும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நாள் நவம்பர் 9ஆம் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலை திரும்ப பெறுவதற்கான காலம் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. 

உத்திரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள பத்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு, பாஜக சார்பில் 8 நபர்களும், பங்குஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருவரும் மற்றும் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக கட்சியை சேர்ந்த வேட்பாளர் நரேஷ் பன்சால் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார். 

இவர்களைத் தவிர வேறு யாரும் போட்டியிடுவதற்காக மனு தாக்கல் செய்யாத காரணத்தினால், மேலே குறிப்பிட்டுள்ள 11 நபர்கள் மட்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகையால் மத்திய அமைச்சரான ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் வெற்றி, இவர்கள் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள். அதனால் பாஜக தனிப்பெரும்பான்மை வகித்துள்ளது. பாஜகவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 92 ஆக உயர்வு.

அத்துடன் பாஜக கட்சி மாநிலங்களவையில் தனி பெரும்பான்மையை பிடித்துள்ளதால், கூட்டணி கட்சி மற்றும் தோழமை கட்சியின் ஆதரவை கொண்டு எந்த விதமான மசோதாவையும் தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.