சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு? விரைவில் அமல்!
நாடு முழுவது சுங்கச்சாவடி வழியாக செல்லும் அனைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாஸ்ட்டேக் அறிமுகம் படுத்தப்பட்டது. இதன் மூலம் கால விரையம் சில்லறை தட்டுப்பாடு, எரிப்பொருள் வீணாவது போன்றவைகள் தவிர்க்கப்பட இந்த டிஜிட்டல் பேமென்ட் முறை செயல்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.90%சதவீத சுங்கச்சாவடிகளில் உள்ள ஐந்து நுழைவாயில்களில் பாஸ்டேக் பரிவர்த்தனைக்காக நான்கு நுழைவாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஒரு நுழைவாயில் மட்டுமே சுங்கவரியை பணமாகச் செலுத்த வேண்டும்.மேலும் சுங்கச்சாவடிகளில் சிக்கல் நீட்டித்து வருகின்றது.இதனால் ஜிபிஎஸ் மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செப்படம்பர் 1ஆம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சுன்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றி அமைக்கப்படவுள்ள கட்டணம் ஒரு வருடம் வரை அமலில் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.மாநிலத்தில் தேசிய நெடுஞ்சளைகளில் 50 பிளாசாக்கள் இருகின்றது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் உள்ள கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பரல் 1 ஆம் தேதி முதல் திருத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.