காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து 70 அடியாக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணையான கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு 70 ஆயிரம் அடிக்கு மேல் வருகிறது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில், இன்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3.82 அடி அதிகரித்தது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95. 27 அடியாக உள்ளது.
நேற்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 54.32 பிஎஸ்சி என்ற நிலையில் /இன்று காலை 58.10 டிஎம்சி ஆக அதிகரித்தது.
மேலும் மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்திற்காக 18 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.