அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! 

Photo of author

By CineDesk

அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!! 

CineDesk

Increased age of government buses !! Government of Tamil Nadu order !!

அதிகரித்தது அரசு பேருந்துகளின் வயது!! தமிழ்நாடு அரசு ஆணை!!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மொத்தம் 19,290 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த கணக்கில் மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் 2200 பேருந்துகள் மற்றும் அரசு விரைவு போக்குவரத்தின் கீழ் 385 பேருந்துகள் இயங்குகிறது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் 300 கி.மீ. அதிகமான தூரம் கொண்ட வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாக உள்ளன.

தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய தவகள் ஒன்றினை  வெளியிட்டுள்ளது. அது அரசு பேருந்துகள் மற்றும் விரைவு பேருந்துகளின் ஆயுட்காலத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது என்பதாகும்.

இதன் படி அரசு பேருந்துகளுக்கு முன்பு இருந்த 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ வரை பயணிக்கலாம் என்றது இப்பொழுது 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ வரை பயணிக்கலாம் என ஆயுள்காலத்தை அதிகரித்து ஆணை பெற்றுள்ளது. பிற பேருந்துகளுக்கும் முன்பு இருந்த 6 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ வரை பயணிக்கலாம் என்பது தற்போது 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ வரை பயணிக்கலாம் என ஆயுள்காலத்தை அதிகரித்து ஆணை பெற்றுள்ளது.