அதிகமாகும் ஊதிய உயர்வு! இத்தனை பர்சென்டேஜ் அதிகமா? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்! 

Photo of author

By Amutha

அதிகமாகும் ஊதிய உயர்வு! இத்தனை பர்சென்டேஜ் அதிகமா? மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு அதிகரிப்படவுள்ள நிலையில் எத்தனை சதவீதம் அதிகமாகும் மற்ற தகவல்கள் குறித்து தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட நாட்களாக மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி அவர்களை தேடி வந்துள்ளது. அதாவது மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலமாக மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் கணிசமாக உயர்வு இருக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது வருடத்திற்கு இரண்டுமுறை அதிகரிக்கப்படுகின்றது. அதாவது ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியிலும் ஜூலையிலும் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அதாவது அகவிலைப்படி உயர்த்தப்படுகின்றது.
இந்த அகவிலைப்படி உயர்வு எவ்வாறு உயர்த்தப்படுகின்றது என்றால் முந்தைய ஆண்டின் AICPI இன்டெக்ஸ் என்பதை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகின்றது. அதாவது ஜூலை மாதத்தின் அகவிலைப்படி முந்தைய ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI இன்டெக்ஸ் அடிப்படையிலும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு முந்தைய ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான AICPI இன்டெக்ஸ் அடிப்படையிலும் கணக்கிடப்படுகின்றது.
அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வந்து கடந்த ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரையிலான AICPI இன்டெக்ஸ் அடிப்படையில் உயர்த்தப்பட்டது. இதையடுத்து இரண்டாவது முறையாக அகவிலைப்படி உயர்வு அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றது.
ஆனால் இன்னும் ஜனவரி 2024 முதல் மே 2024 வரை AICPI இன்டெக்ஸ் மதிப்புகள் வெளியாகி இருக்கும் நிலையில் ஜூன் 2024 மாதத்திற்கான AICPI இன்டெக்ஸ் மதிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இது வெளியான பின்னர் ஜூலை 2024ம் ஆண்டுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து சரியான தகவல்கள் கிடைக்கும்.
இருப்பினும் ஜூலை 2024-க்கான அகவிலைப்படி குறித்த விவரங்கள் இந்த மாதம்(ஆகஸ்ட்) அல்லது செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்து வரும் அறிவிப்பின் படி அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரித்தால் 100170 ரூபாய் வரையிலான நன்மைகளை மத்திய அரசு ஊழியர்கள் பெறவுள்ளனர். இந்த ஊதிய உயர்வானது மத்திய அரசு ஊழியர்களின் தர ஊதியம் மற்றும் சம்பளத்தை பொறுத்து அமையும்.
இதுவரை வெளியாகி இருக்கும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான AICPI இன்டெக்ஸ் மதிப்பு குறித்து பார்க்கலாம். ஜனவரி மாதத்திற்கான AICPI இன்டெக்ஸ் மதிப்பு 138.9 புள்ளிகளாக இருந்த பொழுது அகவிலைப்படி 50.84 சதவீதமாக இருந்தது. பிப்ரவரி மாதத்திற்கான AICPI இன்டெக்ஸ் மதிப்பு 139.2 ஆக இருந்த பொழுது அகவிலைப்படி 51.44 சதவீதமாக இருந்தது.
மார்ச் மாதத்திற்கான AICPI இன்டெக்ஸ் மதிப்பு 138.9 ஆக இருந்த பொழுது அகவிலைப்படி 51.95 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் AICPI இன்டெக்ஸ் மதிப்பு 139.4 ஆக இருந்த பொழுது அகவிலைப்படி 52.43 சதவீதமாக இருந்தது. மே மாதத்திற்கான AICPI இன்டெக்ஸ் மதிப்பு 139.9 ஆக இருந்த பொழுது அகவிலைப்படி 52.91 ஆக இருந்தது.
இந்நிலையில் 7வது ஊதியக் குழுவின் படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்படும் பொழுது அவர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஜூலை 2024க்கான அகவிலைப்படி 3 சதவீதம் அல்லது 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய சம்பள உயர்வு இருக்கும்.
இன்னும் 8வது ஊதியக்குழு பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த ஏமாற்றத்தை சரிகட்டும் வகையில் தற்பொழுது அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
உதாரணமாக அகவிலைப்படி 3 சதவீதம் உயர்கின்றது என்றால் மொத்த அகவிலைப்படி 53 சதவீதத்தை எட்டும். இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் சம்பளத்தில் மாதம் 945 ரூபாய் அதிகரிக்கும். ஆக 6 மாதங்களில் அவர்களின் சம்பளம் 5670 ரூபாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அகவிலைப்படி உயர்வது மட்டுமில்லாமல் அவர்களுக்கு அகவிலைப்படி அரியர் தொகையும் கிடைக்கும். அதாவது அகவிலைப்படி எந்த மாதத்தில் வெளியிடப்பட்டாலும் அந்த மாதம் முதல் ஜூலை 2024 வரையிலான டிஏ அரியர் தொகை மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.