அதிகரிக்கும் கொரானா! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு

0
188
#image_title
அதிகரிக்கும் கொரானா! சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வு.
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் பல பகுதிகளில் கொரானா தொற்று வேகமாக பரவியதன் விளைவாக எண்ணற்ற உயிர்கள் பலியாகி வந்தன. இந்நிலையில் இந்த தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்ததின் பலனாக பாதிப்பு குறைய தொடங்கியது.
இதனை அடுத்து தற்போது மீண்டும் நாட்டின் பல மாநிலங்களில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் இந்த சூழலில், சில நாட்களாக பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நோய் தொற்று நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கைளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,  நேற்று  ஒட்டுமொத்தமாக 10,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று(நேற்று) 6,904 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினம் ஏற்பட்ட பாதிப்பை விட குறைவாகும். இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4,48,98,893 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 67,806-லிருந்து 65,683-ஆக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 16 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,345-ஆக அதிகரித்துள்ளது.
Previous articleமதுபானம் அனுமதி இல்லை! அமைச்சர் திட்ட வட்டம்
Next articleகென்யாவில் கொடூரம்! இயேசுவை சந்திப்பதாக 40 பேர் இறப்பு