அதிகரிக்கும் கொரோனா தொற்று! மீண்டும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு
உலகில் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக பொருளாதரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துகொண்டுவருகிறது .
2020-மார்ச் மாதத்தில் கொரோனா பரவலை உலகளாவிய பெருந்தொற்றாக உலக சுகாதார மையம் அறிவித்தது. கொரானா பரவலால் அமெரிக்காவில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் .இதியாவில் இந்த எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளன.
இந்த நிலையில் சீனாவில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளத்து.
அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த தொழிற்சாலையில் 3-லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் பணி புரியும் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கால் ஏற்படும் பாதிப்பிற்கு பயந்து அங்கு இருந்து மக்கள் வேலி மீது ஏறி தாண்டி குதித்து தப்பி செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.
ஊரடங்கால் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்கின்றனர். இவ்வாறு செல்லும் மக்களுக்கு உள்ளூர் வாசிகள் இலவச விநியோக நிலையங்கள் அமைத்து உணவு வழங்குகின்றனர் .