இந்தியாவில் அதிகரித்து வரும் இயற்கை சீற்றம் !! அச்சத்தில் பொதுமக்கள் !!

இன்று காலை அருணாச்சல பிரதேச பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் நகரிலிருந்து தென்மேற்கு பகுதியில் ,சுமார் 47 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

இதனைத்தொடர்ந்து , நேற்று பகல் 12.50 மணியளவில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய பிரதேசம் மற்றொரு மாவட்டமான சிந்தாராவில் நேற்று மாலை 5:20 அளவில், 3.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 10.09 மணி அளவில் லடாக் பகுதியில் , 4.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும், சிறிது நேரத்திற்கு பின்பு இரவு 11:31 மணியளவில் மீண்டும் லேசான நிலநடுக்கம் 3.8 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது..

இந்தியாவின் வடக்கு பகுதியில் ஒருபுறம் பருவமழை பாதித்து வரும் நிலையில், நிலநடுக்கம் அடுத்தடுத்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாக இந்தியாவின் வட மேற்கு பகுதியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment