அதிமுக தலைமை அலுவலக வாசலில் நாளுக்கு நாள் போலீசாரின் பாதுகாப்பு அதிகரிப்பு?
அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கையானது ஐம்பதிலிருந்து 150 ஆக போலீஸ் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் 50 போலீஸ் பாதுகாப்பு மட்டும் போடப்பட்டுள்ளது. ஆனால் திடீரென்று இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் 150 போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டது.
இன்றைய தினம் காவல்துறை அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் இரு தரப்பினரும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று 50 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள். இன்றைய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் எண்ணிக்கை இன்று முதல் அதிகரித்து வருகிறது. சுழற்சி முறையில் மூன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மொத்தமாக நாள் ஒன்றுக்கு 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வை சண்முக சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள சாலைகளில் இரண்டாவது நாளாக பத்துக்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவ்வை சண்முகசாலை இரு பகுதிகளிலும் போலீசார்கள் குவிக்கப்பட்டு தடுப்புச் சுவர்களை அமைத்து வருகின்றனர்.
இங்கு குழுக்களாக செல்லும் நபர்களை சோதித்த பிறகு அவ்வை சண்முக சாலை வழியாக அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கோப்புகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடப்பட்டு இருப்பதாக இபிஎஸ் அணியின் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சீல் வைத்தது.இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்பொழுது வழக்கின் விசாரணையாக இன்று வரை இருக்கக்கூடிய சூழ்நிலையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பும் அதிகப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகிவுள்ளது.