காய்ச்சல் கொப்பளம்.. இதெல்லாம் தக்காளி காய்ச்சல் அறிகுறி!! குழந்தைகளுக்கு எச்சரிக்கை!!

0
31
Increasing tomato fever!! Public Health Department warned!!
Increasing tomato fever!! Public Health Department warned!!

குழந்தைகளுக்கு பறவை காய்ச்சல் பரவுவதாகவும் கட்டாயம் அவர்களுக்கு கொடுக்கும் இறைச்சியை நன்றாக வேகவைத்து கொடுக்குமாறும் அறிவிப்புக்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. இந்நிலையில் பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு தக்காளி காய்ச்சல் ரீதியாகவும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெயில் காலங்களில் பொதுவாகவே குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் வருவது இயல்பான ஒன்று. இது குறிப்பாக சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் தான் வரும். முதலில் குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் வந்து விட்டால் தொண்டை வலி அதிகரிக்கக்கூடும். முதலில் காய்ச்சலும் அதனைத் தொடர்ந்து கை, முதுகு, கால் என அனைத்து இடங்களிலும் சிறு சிறு கொப்பளங்கள் காணப்படும். குறிப்பாக அரிப்பும் சேர்ந்து இருக்கும்.

இச்சமயத்தில் குழந்தைகளை மிகவும் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல பள்ளிக்கு சென்று வந்தவுடன் கை கால் உள்ளிட்டவற்றை கழுவ பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும். இந்த காய்ச்சல் பெரும்வாரியான பாதிப்பை கொடுக்காது. ஆனால், மாறாக உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவை உண்டாகக்கூடும். மேற்கொண்டு இந்த தக்காளி காய்ச்சல் வரும் பட்சத்தில் ஓரிரு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.

மேற்கொண்டு சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் இதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம். அதுமட்டுமின்றி இது ரீதியாக பொது சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். தற்காலத்தில் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் குழந்தைகளை முன்கூட்டியே பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்து சென்றும் ஆலோசனை பெறலாம்.

Previous articleதமிழக பாஜக தலைவர் பதவி விவகாரத்தில் திடீர் டிவிஸ்ட்!.. அண்ணாமலையே சொல்லிட்டாரே!…
Next article7 ஆம் தேதி பொதுத்தேர்வு கிடையாது!! 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு!!