IND vs NZ: இந்திய அணியில் ஷமி யால் விளையாட முடியாது.. ரோஹித் கொடுக்கும் விளக்கம்!

Photo of author

By Rupa

 

 

நியூசிலாந்து  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது . அதன் படி இன்று  இதற்கான முதல் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உட்பட்டது என்பதால் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாக கருதப்படுகிறது. இன்று(புதன்) முதல் போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்க உள்ள நிலையில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில்,  ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டன் ,கே.எல்.ராகுல் ,விராட் கோலி ,சுப்மன் கில் , யஷஸ்வி  ஜெய்ஸ்வால், சர்ப்ராஸ் கான் ,ரிஷப் பண்ட் ,துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி ,ரவிச்சந்திரன் அஸ்வின் ,ரவீந்திர ஜடேஜா ,அக்சர் படேல் ,ஆகாஷ் தீப் ,ஹர்ஷித் ரானா , குல்தீப் யாதவ், மயங்க யாதவ் , முகமது சிராஜ் , பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் முக்கிய முன்னணி வீரரான வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெறவில்லை.

இதுகுறித்து கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.  அவர் பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாட தீவிர பயிற்சி மேற்கொண்டு  வந்த நிலையில் மீண்டும் அவரது கால் முட்டியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை பெற்று மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் முழு உடல் தகுதி பெற்ற பின்பு இனி வரும் போட்டிகளில் அணியில் இடம் பெறுவார் என கூறியுள்ளார்.