பிரபல நடிகையை திருமணம் செய்யவுள்ளாரா பிகில் நடிகை?

Photo of author

By CineDesk

பிரபல நடிகையை திருமணம் செய்யவுள்ளாரா பிகில் நடிகை?

CineDesk

தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்ற நடிகை இந்துஜா, தனது சக நடிகை ஒருவரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேயாத மான் படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா எந்நேரமும் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக செயல்படுபவர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்துஜாவுடன் மகாமுனி என்ற படத்தில் நடித்த மஹிமா நம்பியார், ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று இன்ஸ்டாகிராமில் கேள்வி எழுப்ப இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்துஜா ‘உனக்கு சம்மதம் என்றால் எனக்கும் சம்மதம், எப்போது திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்

நடிகைகள் இருவரும் காமெடியாக உரையாடிய இந்த உரையாடலை ஒருசிலர் சீரியஸாக எடுத்து கொண்டு கடுமையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பிகில் படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இந்துஜா மூன்று தமிழ்ப்படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது