இலங்கையின் கோரிக்கையை ஏற்றது இந்தியா! 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு வழங்க ஒப்புதல்!

Photo of author

By Sakthi

நம்முடைய அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக, அங்கே அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக எகிறி இருக்கிறது.

இதன் காரணமாக, பொதுமக்கள் வெகுவாக பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள், அதிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக, இலங்கையின் மக்கள் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தில் குதித்தனர்.

இதன் காரணமாக, அந்த நாட்டின் பிரதமர் பதவி வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷ திடீரென்று பதவி விலகினார். இதனை தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு உணவு பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கையை முடுக்கி விட்டிருக்கிறது.

அதேசமயம் இலங்கை மக்களுக்கு தேவைப்படும் உணவு எரிபொருள் மருந்து மற்றும் உரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி இந்தியா உதவி செய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று இலங்கை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பாக்லேவை சந்தித்து உரையாடியிருக்கிறார். அப்போது இலங்கைக்கு கடன் உதவி திட்டத்தின் கீழ் இந்தியா வரும் கொடுத்து உதவுமாறு மஹிந்த அமரவீரா கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இந்தக் கோரிக்கையை தொடர்ந்து இந்தியாவின் உரத்துறை உயர் செயலாளர் ராஜேஷ்குமார் சதுர்வேதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் யாழ்பருவத்திற்கு தேவையான 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை வழங்குவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர் ஆணையம் தெரிவித்திருக்கிறது.