“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு… ஆனா நாங்க அதுக்கு வர்ல” – பங்களாதேஷ் கேப்டன்

0
147

“இந்தியா கோப்பைய வெல்ல வந்துருக்கு… ஆனா நாங்க அதுக்கு வர்ல” – பங்களாதேஷ் கேப்டன்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டி இன்று அடிலெய்டில் நடக்க உள்ளது.

இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளை அடுத்தடுத்து வென்ற, இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பேட்டிங் சொதப்பல் காரணமாக சொதப்பியது.

இதையடுத்து இன்று முக்கியமான போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை வெல்லும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பு மேலும் பிரகாசமாகும். அடிலெய்டில் நடக்கும் இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் காயமடைந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்குப் பதில் ரிஷப் பண்ட் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல அஸ்வினுக்கு பதில் சஹால் இறக்கப்படவும் வாய்ப்புள்ளது என தெரிகிறது. மோசமாக விளையாடி வரும் ராகுல் இந்த போட்டியிலாவது பார்முக்கு திரும்புவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த போட்டி குறித்து பங்க்ளாதேஷ் கேப்டன் ஷகீப் அல் ஹசன் “போட்டிக்கு முன்னேறும் விருப்பமான அணி இந்தியா. அவர்கள் உலகக் கோப்பையை வெல்வதற்காக இங்கு வந்துள்ளனர், உலகக் கோப்பையை வெல்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை” என்று ஷகிப் கூறினார். இந்த பேச்சு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் “நீங்கள் நிலைமையை புரிந்து கொள்ள முடியும், நாங்கள் இந்தியாவுக்கு எதிராக வென்றால், அது ஒரு வருத்தமாக இருக்கும், மேலும் இந்தியாவை வருத்தப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.” எனவும் பேசியுள்ளார்.

Previous article2 நாள் பயணமாக சென்னைக்கு வருகிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி! முதல்வரை சந்திப்பாரா?
Next article“பூம்ரா உடல்நிலை பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது…” பிசிசிஐ சொன்ன அப்டேட் இதுதான்!