சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

0
134

சென்னை ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்?

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு காரணமாக கிரிக்கெட் வர்ணனையாளர் கூறும் ஒரு சில காரணங்களை தற்போது பார்ப்போம்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா ஆரம்பத்தில் மிக நிதானமாக விளையாடி பந்துகளை வீணடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 56 பந்துகளை சந்தித்து 36 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் 15 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்

கேப்டன் விராத் கோலியும் நேற்று 4 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறினார். முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் பேட்டிங்கில் சொதப்பிய போதிலும் நேற்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடினர். இருப்பினும் அதன்பின் வந்த ஜடேஜா, டூபே ஆகியோர் அதிரடி கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாட தவறியதும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக உள்ளது

மேலும் இந்திய அணியின் பவுலிங்கை பொருத்தவரை நேற்று பவுலர்கள் விக்கெட் எடுத்த தவறிவிட்டனர். தீபக் சஹர் மற்றும் ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்த போதிலும் கேதார் ஜாதவ், குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் இருவரின் பந்துகள் நேற்று எடுபடவில்லை. அதேபோல் டூபே நேற்று 7.5 ஓவர்கள் வீசி 68 ரன்கள் கொடுத்ததும் ஜடேஜா 10 ஓவர்கள் வீசிய 58 ரன்கள் கொடுத்ததும் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது. மொத்தத்தில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் சொதப்பியதே தோல்வி காரணமாக படுகிறது

ஸ்கோர் விபரம்

இந்திய அணி: 287/8 50 ஓவர்கள்

ரிஷப் பண்ட்: 71
ஸ்ரேயாஸ் ஐயர்: 70
ரோஹித் சர்மா: 36
கேதார் ஜாதவ்: 40

மே.இ.தீவுகள் அணி: 291/ 47.5 ஓவர்கள்

ஹெட்மயர்: 139
ஹோப்: 102
பூரன்: 29
அம்ப்ரிஸ்: 9

ஆட்டநாயகன்: ஹெட்மயர்

அடுத்த போட்டி: டிசம்பர் 18, கட்டாக்

Previous articleமத்திய அரசு மறுப்பு! தமிழக அரசு தாராளம்: மருத்துவர் ராமதாஸ் பெருமிதம்
Next articleஇதெல்லாம் ஒரு படமா? எஸ்ஏ சந்திரசேகரருக்கு கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்