சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி; எல்லை விவகாரத்தில் அமெரிக்க அமைச்சர் பாராட்டு

Photo of author

By Jayachandiran

எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா, பூடான் போன்ற நாடுகளிடையே சிக்கலை ஏற்படுத்தி வரும் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய-சீனா எல்லை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பலமுறை பேசியிருப்பதாக கூறியுள்ள பாம்பியோ, எல்லை பிரச்சினையில் சீனா ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் பிரச்சினை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், உலக நாடுகள் இதனை அனுமதிக்க கூடாது என்றும் கூறியுள்ளார்.

சீனாவை சுற்றியுள்ள நாடுகளின் எல்லைகள் எங்கு முடிகிறது என்பது உறுதியாக தெரியவில்லை என்பதால், சீனா இதனை மதித்து நடக்க வேண்டும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் சீனா-பூடான் ஆகிய நாடுகளுக்கிடையிலான விவகாரமும் இதன் உண்மையை உணர்த்தியுள்ளதாக கூறினார்.