இந்தியா-சீனா எல்லை பிரச்சினை இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலுக்கு பிறகு பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இருதரப்பில் குவிக்கப்பட்ட இராணுவ படைகள் விலக்கிக் கொண்டனர். சீனா தரப்பில் குறிப்பிட்ட இடமான ஃபிங்கர் மலைத்தொடர் பகுதியில் மட்டும் முழுமையாக படைகளை விலக்கிக் கொள்ள ஒப்புதல் அளிக்கவில்லை.
முழு படைகளை சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. சர்ச்சையான லடாக், கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா போஸ்ட் ஆகிய பகுதிகளில் இருந்து முழு படைகளையும் விலக்கிக் கொள்ள சீனா ஒப்புக்கொண்டது, ஆனால் பிங்கர் பகுதியில் மட்டும் படைகளை ஒப்புக்கொள்ளவில்லை.
வழக்கமான எல்லை பாதுகாப்பு நேரத்தில் படைகள் எங்கு இருந்ததோ அதே இடத்தில் படைகளை நிறுத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று நடத்திய பலமணி நேர பேச்சுவார்த்தை முடிவில் இந்தியா சீனாவிடம் தெரிவித்துள்ளது.