ரஷ்யாவின் உக்ரைன் மீதான தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தற்போது வரை நீடித்து வருகிறது புச்சா நகரை முழுவதும் சடலங்கள் சூழ்ந்திருக்கின்றன அந்த நகர மேயர் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். குப்பை கொட்டும் தொட்டிகளில் பொதுமக்களில் 20 பேரின் உடல்கள் போடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. இது குறித்து வெளியான புகைப்படங்கள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றன.
அந்த நகரத்தில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டன இது குறித்து ஐநா பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பாக உரை நிகழ்த்திய நிரந்தர ஐநா பிரதிநிதி பி.எஸ். திருமூர்த்தி தெரிவித்திருப்பதாவது உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து வருகிறது அங்கே மனிதாபிமான நிலைகளும் மோசமடைந்திருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார்.
புச்சா நகரில் பொதுமக்கள் படுகொலைகள் தொடர்பான சமீபத்திய அறிக்கைகள் ஆழ்ந்த கவலை தருகின்றன. இந்த கொலைகளை நாங்கள் சந்தேகத்திற்கிடமின்றி கண்டிக்கின்றோம். சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அவர் ஐநா சபையில் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா உக்ரைனுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நிவாரண பொருட்களை அனுப்பி வருகிறது. எதிர்வரும் நாட்களில் உக்ரைனுக்கு இன்னும் அதிகமான மருத்துவ பொருட்களை வழங்க நாங்கள் தயாராகவுள்ளோம் என்று தெரிவித்திருக்கிறார்.
மனிதாபிமான நடவடிக்கையை நடுநிலைமை, பாரபட்சமற்ற தன்மை போன்ற நடவடிக்கைகள் ஒருபோதும் அரசியலாக்க கூடாது. சர்வதேச சமூகம் தொடர்ந்தும் மனிதாபிமான சேவைகளுக்கு சாதகமாக பதிலளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறியிருக்கிறார்.
மனிதாபிமான முறையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கப்படுவதற்கு பாதுகாப்பான பாதை அமைக்கும் உத்தரவாதங்களை வலியுறுத்தும் கோரிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.
இருநாடுகளும் பிரச்சனைக்கு தூதரக ரீதியில் தீர்வு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் பாதையை தொடர வேண்டியதன் அவசியத்தை ஆரம்பத்திலிருந்தே இந்தியா வலியுறுத்தி வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.