இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

நாட்டில் நோய்தொற்று குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 549 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பான வந்து 9119தை விட சற்று அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, இந்தியாவில் நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து 98608 பேர் அடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, நாட்டில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 77 ஆயிரத்து 830 ஆக அதிகரித்திருக்கிறது நோய்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இருந்தாலும் நோய்த்தொற்று தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 482 பேர் பலியாகி இருக்கிறார்கள் இதனால் நாட்டில் நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்து 488 ஆக அதிகரித்திருக்கிறது.