ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவிக்கப்பட்ட இந்தியா!! குற்றம் சாட்டிய கனடா!!

0
122

கனடா அரசு ஏற்கனவே நான்கு நாடுகளை சைபர் எதிரியாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தியாவையும் ஐந்தாவது சைபர் எதிரியாக அறிவித்திருப்பது இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா இடையே மோதல் இருந்து வந்தது.

இதனை தொடர்ந்து, சீக்கிய பிரிவினைவாதிகளை குறிவைத்து வன்முறை மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டதாக கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு கனடா அரசு வெளியிட்ட அறிவிப்பினால் இந்திய அரசு கனடா மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனால்தான் கனடா அரசு இந்தியாவை தன்னுடைய சைபர் எதிரி நாடாக அறிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பிடத்தக்கது இந்தியா ஐந்தாவது சைபர் எதிரி நாடாக உள்ளது தான். ஏற்கனவே இந்த லிஸ்டில் சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா அரசு இது குறித்து அறிக்கை ஒன்றை கனடிய இணைய பாதுகாப்பிற்கான தேசிய தொழில்நுட்ப மையம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleபாஜக, திமுக அரசை  சீண்டிய விஜய்!!  தவெக செயல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!!
Next articleஉலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!! இஸ்ரேலுடன் இணைப்பை கட்டளை!!