இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட்! காலியான டிக்கெட்!

Photo of author

By Sakthi

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றது நான் இந்த டெஸ்ட் போட்டி 5 டி20 போட்டி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகின்றது.

இந்த ஆட்டங்கள் காண நுழைவுச்சீட்டு விற்பனை இணைய தளம் மூலமாக ஆரம்பமானது நீண்ட தினங்களுக்கு பின்னர் சென்னையில் நடைபெறும் போட்டி என்பதால் தமிழக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வந்தார்கள்.

2வது டெஸ்ட் போட்டியின் போது 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்று பிசிசிஐ அறிவித்திருந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 38,000 பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கலாம் தற்சமயம் 50 சதவிகித ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு அதன் மூலமாக போட்டி நடைபெறும் தினங்களில் நாள்தோறும் 19,000 பேர் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

அந்த விதத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான நுழைவுச் சீட்டு முன்பதிவு இணையதளங்கள் மூலமாக நேற்று காலை விற்பனையாக ஆரம்பமானது ஆர்வத்துடன் டிக்கெட்டை வாங்கி சென்ற ரசிகர்கள் அவர்கள் முன்பதிவு செய்த அடுத்த ஒரு சில மணி நேரங்களில் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்து போயின இதன் காரணமாக நுழைவுச்சீட்டு கிடைக்காத ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள் 2வது டெஸ்ட் போட்டியின் பொழுது 19 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டு களிக்கலாம் என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.