இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!!! மேலும் ஒரு பதக்கம் உறுதி!!!
ஆசியா விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட்டில் இன்று(அக்டோபர்6) நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிகள் நுழைந்தது. இதன் மூலமாக இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதியாகி இருக்கின்றது.
சீனாவில் ஹாங்சோங் நகரில் கடந்த செப்டம்பர் 23ம் தேதி ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகள் அனைவரும் வட்டு எறிதல், உயரம் தாண்டுதல், கோல்ப், ஈட்டி எறிதல், ஓட்டப்பந்தயம், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் என்று அனைத்து விதமான போட்டிகளிலும் பதக்கங்களை வென்று குவித்து வருகின்றது.
இதில் மற்றொரு போட்டியான கிரிக்கெட்டில் ஆண்கள் பிரிவில் இன்று(அக்டோபர்6) இந்திய அணி வங்கதேசத்தை எதிர் கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேசம் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர் கொள்ள முடியாமல் திணறியது. வங்கதேச அணியில் விளையாடிய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் வங்கதேச அணி 20 ஓவர்களின் முடிவில்9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக ஜாகெர் அலி 24 ரன்களும், பர்வெஷ் ஹூசைன் எமொன் 23 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங், சபாஷ் அஹ்மத், ரவி பிஷ்னோயி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
97 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய திலக் வர்மா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த திலக் வர்மா 26 பந்துகளில் அரைசதம் அடித்து 55 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதே போல மறுபுறம் அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடங்கிய வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 40 ரன்களை சேர்த்தார்.
இதன் மூலம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் கிரிக்கெட் பிரிவில் இறுதிப் பெட்டிக்கு சென்றுள்ளது. இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு பதக்கம் உறுதியாகி இருக்கின்றது. இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணிக்கு தங்கமும், தலைவி பெறும் பட்சத்தில் இந்தியாவுக்கு வெள்ளியும் கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.