Trump: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பால் இன்று பங்குச்சந்தை நிலவரமானது படும் சரிவை சந்தித்துள்ளது. மேற்கொண்டு ஆசிய நாடுகள் பெரும்பாலான பாதிப்பை சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கு பிளட் பாத் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் எங்கள் நாட்டிற்கு நீங்கள் எவ்வளவு வரி விதிக்கிறீர்களோ அப்படியே நாங்களும் விதிப்போம் என்று வரி விலக்கை மாற்றியது தான் இது அனைத்திற்கும் காரணம்.
இந்த வரி விதிப்பால் ஆசிய நாடுகள் பணம் வீக்கத்தை சந்திக்க கூடும். உலகிலேயே அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆசியா தான் பெயர் வாய்ந்தது. இங்குதான் உற்பத்தி என தொடங்கி வேலை செய்ய வரும் நிர்வாகிகள் வரை அனைவருக்கும் குறைந்த முதலீட்டை ஒதுக்கினால் போதும். இதுவே வெளிநாடுகளில் அதன் உற்பத்தி முதலீடானது அதிகம். இங்கிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் அமெரிக்காவில் விலை வாசி உயர்வால் பொருட்கள் விற்காமல் அப்படியே இருக்கும். இந்த மந்த சூழலால் கட்டாயம் உற்பத்தியில் அடிவாங்கும், பணம் வீக்கம் ஏற்படும். முதலீட்டாளர்களும் தங்கள் பணத்தை முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். அச்சமயத்தில் ஐடி ரீதியாக பல தொழில்கள் அடி வாங்கும் எனக் கூறுகின்றனர்.
அதேபோல அமெரிக்காவிலும் இன்னும் ஒரு சில மாதங்களில் பொருளாதாரம் சற்று சரிவை சந்திக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி அமெரிக்காவில் உற்பத்தி திரானானது முன்பை விட குறைந்துக் கொண்டே வருகிறது. தனது நாட்டின் உற்பத்தி திறனை அதிகரிக்கவே ட்ரம்ப் திட்டமிடுவதாக கூறுகின்றனர்.