இந்தியா இங்கு மட்டுமே சிறந்த அணி!! முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஓபன் பேட்டி!!

0
136
India is the only best team here!! Former Australian captain open interview!!
India is the only best team here!! Former Australian captain open interview!!

இந்திய கிரிக்கெட் அணியை பற்றி முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அதிரடியாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி டிசம்பர் 6-ஆம் தேதி அடிலெய்டில் தொடங்கவுள்ளது.

இந்த சூழ்நிலையில் முதல்  போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்துள்ளார்.

அவர் கூறுகையில் ஆஸ்திரேலிய அணி மிகவும் மோசமாக 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை. இது அந்த அணிவீரர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். இந்திய அணி டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தேர்வு செய்தது சரியா? என பலரும் என்னிடம் கேள்வி கேட்டனர்.

அவர்களுக்கு நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இதற்கு முன்னால் பெர்த்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட்டிங்கை கையில் எடுத்த அணிகளே வெற்றியை பெற்றுள்ளன. அதனால் முதலில் பேட்டிங் செய்வது தான் சரியாக இருக்கும்.

ஆனால் இந்திய அணி இந்த புள்ளி விவரங்களுக்கு எதிராக செல்ல விரும்பவில்லை. அவர்கள் முதல் இன்னிங்சில் 150 ரன்னில் சுருண்டாலும் பௌலிங்குக்கு உகந்த ஆடுகளத்தில் அவர்களுக்கு பந்து வீச வாய்ப்பு கிடைத்ததால் தங்களது வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, மற்றும் பும்ரா, நிதிஷ்குமர் ரெட்டி சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளனர்.

இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு அவர்களை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும். உண்மையில் இந்திய அணி இந்த தொடரை வெற்றியோடு அந்நிய மண்ணில் தொடங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்திய அணியானது தனது சொந்த மண்ணை விட வெளிநாட்டில் தான் சிறந்த அணியாக தற்போது திகழ்ந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளூர் சூழலை விட வெளிநாட்டு சீதோஷ்ண நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நன்றாக விளையாட பழகியுள்ளனர். அதைத்தான் அவர்கள் கடந்த வாரம் நடைபெற்ற பெர்த் டெஸ்டில் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

Previous articleஆதார் கார்டில் சுய விவரங்களை புதுப்பிக்க குறிப்பிட்ட வரம்பு அறிவிப்பு!!
Next articleமீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை!! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!