ட்ரோன் மீது தாக்குதல் மேற்கொண்ட இந்தியா! கடந்த மாதத்திற்க்கான பதிலடி!
காஷ்மீரில், ஜம்மு நகரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. கடந்த மாதம் 27ஆம் தேதி வெடிகுண்டுகளை ஏற்றி வந்த இரண்டு ட்ரோன்கள் அந்த தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளது. அதில் இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். அந்த தாக்குதல் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது என்று தெரியவந்தது.
தேசிய புலனாய்வு முகாமை இது தொடர்பாக விசாரித்து வருகிறார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்முவில் ராணுவ பகுதிகள் அருகே ட்ரோன்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சில நாட்களாக இந்த நடமாட்டம் நின்றிருந்த நிலையில் மீண்டும் ட்ரோன்களின் நடமாட்டம் காணப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளம் அருகே சத்வாரி- காலுசக் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு ட்ரோன் பறந்து வந்தது.
உரிய நேரத்தில் அதை கவனித்துவிட்ட ராணுவ வீரர்கள் அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதில் சில ரவுண்டு அதை தொடர்ந்து சுட்டதால் அந்த ட்ரோன் பின்வாங்கி சென்று மறைந்துவிட்டது. இதுகுறித்து போலீசாருக்கு ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து ஜம்மு நகரில் முழு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.